திருச்சி மாநகரில் பரபரப்பாக இருக்கும் சாலைகளில் ஒன்று புத்தூர் – வயலூர் சாலை. இதில் புத்தூர் நால்ரோடில் இருந்து பிஷப் ஹீபர் கல்லூரி செல்லும் வழியில் உள்ள கீதாஞ்சலி மருத்துவமனை அருகில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது. இந்தப் பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

குறிப்பாக கல்லூரிக்கு வரக்கூடிய மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் அந்த சாலையை கடக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் சாக்கடை நீர் ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் மீது சாக்கடை நீர் தெளிக்கும் நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது நடந்து செல்லக்கூடிய பாதசாரிகள் மீது சாக்கடை நீர் தெளிக்கும் நிலை உள்ளது.


இது மட்டுமின்றி இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்லக் கூடியவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் இருந்து வழிந்து ஓடும் சாக்கடை நீரை நிறுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக தூய்மை நகரப் பட்டியலில் முதலிடம் பிடித்த திருச்சி மாநகராட்சியில் ஏற்கனவே சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது சாக்கடை நீரும் வெளியேறி வருவது பொது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments