பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக குற்றமே நடக்காமல் தடுக்க பல துறைகள் இணைந்து "கேடயம்" திட்டம் செயல்படுத்தப்படும் - டிஐஜி ஆனி விஜயா பேட்டி!

பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக குற்றமே நடக்காமல் தடுக்க பல துறைகள் இணைந்து "கேடயம்" திட்டம் செயல்படுத்தப்படும் - டிஐஜி ஆனி விஜயா பேட்டி!

திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து, திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில், “கேடயம் – SHIELD” என்ற செயல் திட்டத்தை ஆயுதபடை திருமண மண்டபத்தில் தொடங்கி உள்ளனர். எட்டு மாதங்களுக்கான இந்த திட்டத்தை திருச்சியில் இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராமன், லோகோவை அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தார்.

கேடயம் என்ற திட்டத்தின் செயல்பாடு பற்றி காவல் துறை துணைத் தலைவர் ஆனி விஜயா பேசிய போது… "திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
திட்டத்தின் ஒரு பகுதியாகத் திருச்சி சரகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றச் செயல்களின் தரவுகளைச் சேகரித்து அதில் மிகத் தீவிரத்தன்மை கொண்ட ஆறு குற்றங்களை கண்டறிவது மட்டுமில்லாமல் அதிகமாகக் குற்றங்கள் நடைபெறும் 25 இடங்களை அடையாளம் காணப்படும்.

மேலும் இக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும். குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே உள்ள அச்சத்தைப் போக்க சமூகக் காவலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Advertisement

இத்திட்டம் குற்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்தல், திட்டத்தை வகுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல் ஆகிய நான்கு நிலைகளாக வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், விஞ்ஞான பூர்வமான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட காவல் பணியை உருவாக்கி காவல்துறையின் செயல் திறனை அதிகரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும்.
குற்றவாளிகளின் மத்தியில் அச்சத்தை உருவாக்க முடியும்.

பாதிப்புக்கு உள்ளாகு நிலையில் உள்ள சமூகம் மற்றும் நபர்களிடம் காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து, அவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியும். இதற்கான இரண்டு சிறப்பு உதவி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா

பெண்கள், குழந்தைகள் எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால், அவர்களுக்கு எதிராக குற்றமே நடக்காமல் தடுக்கவே பல துறைகள் இணைந்து 'கேடயம்' திட்டம் செயல்படுத்தப்படும்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

திருச்சி சரகத்தில், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவு நடைபெறுகின்றன. இதுபோன்று, அதிகம் குற்றம் நடைபெறும், 30 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன" என்றார்.