திருச்சி
முசிறி தனியார் மண்டபத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (பி எல் ஏ -2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பயிற்சி அளித்தல் கூட்டம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது..

திருச்சி மாவட்டம், முசிறி தனியார் மண்டபத்தில் முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (பி எல் ஏ -2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பயிற்சி அளித்தல் கூட்டம் முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் முசிறி வட்டாட்சியர் லோகநாதன், தேர்தல் வட்டாட்சியர்கள் சரவணன், ஜாபர் ஆகியோர்கள் முன்னிலை வகுத்தனர், இக்கூட்டத்தில் நாளை நான்காம் தேதி முதல் முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் பொது மக்களிடம் அளித்து

பூர்த்தி செய்வது குறித்த விவரங்களை தெரிவித்தனர், அவர்களுடன் அரசியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் கண்காணிக்கலாம், இப்பணிகள் டிசம்பர் நான்காம் தேதி வரை நடைபெறும், தொடர்ந்து கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்தவர் கடந்த பல வருடங்களாக சுமார் 70க்கும் மேற்பட்டோர் இறந்தவர்களின் சான்றிதழ் வழங்கியும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என குற்றம் சாட்டி இந்த முறையாவது பெயர்களை நீக்க வேண்டும் என ஆதாரங்களுடன் தெரிவித்தார்,

தொடர்ந்து அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சந்தேகங்களை கேட்டு அறிந்து தெரிந்து கொண்டனர், கூட்டத்தில் 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments