திருச்சி மத்திய மண்டல உயர் அதிகாரிகளுக்கு இடையிலான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி (15.07.2024) மற்றும் (16.07.2024) ஆகிய இரண்டு நாட்கள் பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் முதல் காவல் காவல்துறை தலைவர் வரையிலான இந்த போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர், மத்திய மண்டலத்ததைச் சேர்ந்த திருச்சி சரக துணைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர், முதலாம் பிரிவு தளவாய், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும்

காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆகியோர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் துப்பாக்கி சுடும் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ரைபிள் பிரிவில் முதலாவது இடத்தையும், ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றார்.

மேலும் பிஸ்டல் பிரிவில் திருவெறும்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், முதலாவது இடத்தையும், திருச்சி மாநகர வடக்கு மண்டல துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா இரண்டாவது இடத்தையும், ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

ரைபிள் பிரிவில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் முதலாவது இடத்தையும், அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் இரண்டாவது இடத்தையும்,கணினிசார் குற்றப்பிரிவு, அரியலூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அந்தோனிஹரி மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் பிரிவில் திருச்சி மாநகர வடக்கு மண்டல துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா முதலாவது இடத்தையும், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இரண்டாவது இடத்தையும், திருவெறும்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கும், வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments