திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்த மருதை (75) குடும்ப தகராறில் தனது பேரன் பாஸ்கர் என்பவர் தன்னை தாக்கியதாக வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து பாஸ்கரை வைய்யம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் பிரவின் குமார், காவல் செந்தில்குமார் ஆகியோர் லத்தியாலும், ஷூவாலும் மிதித்ததால் காயமடைந்தார். உடனே பாஸ்கர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள் நேயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே காவலர்களில் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது குறித்து தகவல் தெரிந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர், பாஸ்கரை தாக்கிய புகாரில் உதவி ஆய்வாளர் பிரவீன்குமார், காவலர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். வாலிபரை தாக்கிய புகாரில் எஸ்ஐ. காவலர் இடமாற்றம் செய்தது போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments