திருச்சி மாநகரம் வரகனேரி பகுதியை சேர்ந்தவர்கள் அழகேஸ்வரன்(37) மற்றும் உமா சங்கர்(33). இருவரும் சகோதரர்கள். இதில் அழகேஸ்வரன் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார், உமாசங்கர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு உமா சங்கர் மற்றும் அழகேஸ்வரன் இருவரும் வரகனேரி பெரியார் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த உமாசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயம் அடைந்த அழகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காந்தி மார்க்கெட் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த உமாசங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வரகனேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments