இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 24 வது மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருச்சி மாநகர பகுதி,மணிகண்டம் அந்தநல்லூர் ஒன்றிய மக்களின் கோரிக்கையை முன்வைத்து நாளை
21/7/2025 முதல் 30/07/2025 வரை கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. நாளை 21ம் தேதி காலை 9.30 மணிக்கு மேற்கு பகுதி குழுவின் சார்பில் புத்தூர் அக்ரஹாரத்திலும், மாலை மணிகண்டம் ஒன்றிய குழுவின் சார்பில் சோமசம்பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகிலும், அந்த நல்லூர் ஒன்றியத்தில் குழுமணியிலும், கிழக்கு பகுதி குழுவின் சார்பில் நந்தி கோவில் கார்னரிலும், ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ராஜகோபுரம் முன்பும், ஜங்ஷன் பகுதி குழுவின் சார்பில்
பெரிய மிளகு பாறை பகுதியிலும், பொன்மலை பகுதி குழுவின் சார்பில் செம்பட்டு பகுதியிலும் கையெழுத்து இயக்கம் துவங்குகிறது. 10 தினங்களும் பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கமும் மற்றும் பொதுமக்களின் மனுவையும் பெற்றுக் கொள்ள இருக்கிறோம். 31ஆம் தேதி பெற்றுக்கொண்ட மனுவினை உயர் திரு. திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க உள்ளோம். காலை 9.30 மணிக்கு வெஸ்ட்ரி பள்ளியில் இருந்து பேரணி துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். இரா.முத்தரசன்
அவர்களும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களும் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ம. செல்வராஜ்,மாநில செயற்குழு உறுப்பினர் P. பத்மாவதி உள்ளிட்டோர் உரையாற்ற இருக்கிறார்கள்.
Comments