இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் கோரிக்கை கையெழுத்து இயக்கம் ஜூலை 21ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு புத்தூர் அக்ரஹாரம் பவானி ஓட்டல் அருகில் மேற்கு பகுதி செயலாளர் இரா சுரேஷ் முத்துசாமி தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் க. ஆயிஷா, R. ஆனந்தன், B.ரவீந்திரன்,S. சத்யா,
M.சுமதி ஆகியோர் முன்னிலையில் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் M. செல்வராஜ் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் தோழர் சுரேஷ் , மாநகர் மாவட்ட செயலாளர் S.சிவா , இளைஞர் பெருமன்ற செயலாளர் கே தர்மராஜன், மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் G.ஈஸ்வரி, பகுதி குழு உறுப்பினர்கள் மௌலானா ராமச்சந்திரன் ரபீக் அஜித்குமார் மற்றும் தோழர்கள் சண்முகம் ராஜேஸ்வரி குணசிங் தர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து வார்டுகளிலும் வரும் 30 ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெற்று 31ஆம் தேதி பேரணி மற்றும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் , கட்சியின் செயற்குழு உறுப்பினர் P. பத்மாவதி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
திருச்சி மாநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேம்பால பணிகள் துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு தரக்கோரி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக துவக்கிட கோரி
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நிரப்பப்படாத மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்களை உடனடியாக நியமித்திட கோரி திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைத்திட கோரிதிருச்சி மாவட்டத்தில் உள்ள அடிமனை மற்றும் கோயில் மனை, குத்தகை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து ஊராட்சி அமைப்புகளில் பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதை கைவிட கோரி திருச்சி மாவட்டத்தில் வீடில்லா மக்கள் அனைவருக்கும் குடிமனை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்கிட கோரி
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கியும் முழுமையான வேலை வழங்கிடவும், நகர் புறங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்தவும் கோரி
Comments