சாதாரண செல்போனிலும் இயங்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான தனிச்செயலி - அசத்தும் திருச்சி அரசுப்பள்ளி!!

சாதாரண செல்போனிலும் இயங்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான தனிச்செயலி - அசத்தும் திருச்சி அரசுப்பள்ளி!!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய இடைமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் அரசு பள்ளிகளுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. விண்ணப்பம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை சுமார் 551 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக சாதாரண செல்போனிலும் இயங்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தனிச்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். தமிழக கல்வித்துறையில்  அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக  பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் முதன் முறையாக BESTSHINE education campus private limited சார்பாக web bestshineeduapp.com தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியின் மூலம் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு  இணைய வசதி உள்ள கைப்பேசி வழியாக  வீடியோ பாடங்களை அனுப்பி படிக்க உதவிட இயலும். இணைய  வசதி இல்லாத அலைபேசியில் குறுஞ்செய்தியாகவும், ஒலிசெய்தியாகவும் வழங்கி மாணவர்கள்  வீட்டிலிருந்தே  கற்பதற்கு உதவிடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

இச்செயலியின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிதலை  sms  மூலம் அறியும் வகையிலும், மாணவர்கள் பள்ளிக்கு வருகை  புரியவில்லை  என்றால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி செல்லும் வகையிலும், வீட்டுப்பாடம் முக்கிய நிகழ்வுகள் பள்ளி குறித்த அறிவிப்புகள் மாணவர்களின் திறன்  சார்ந்த செயல் பாடுகள் போன்றவற்றை அனுப்பும் முறையாக இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட தனி செயலியின் செயல்பாட்டினை கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பள்ளி வளாகத்தில் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி, மணப்பாறை மாவட்டக்கல்வி அலுவலர் ஜெகநாதன், பள்ளி தலைமையாசிரியர்  பூ.ஜெயந்தி இ.புதூர் குறுவளமைய தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி, வட்டாரக்கல்வி அலுவலர் மருத நாயகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மணிவண்ணன், இடைநிலை ஆசிரியர் புஷ்பலதா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.