காந்தி மார்க்கெட்டில் உள்ளிருப்பு போராட்டம் - வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்!!

காந்தி மார்க்கெட்டில் உள்ளிருப்பு போராட்டம் - வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்!!

திருச்சியில் ஒரு முக்கிய பிரச்சனையாக காந்தி மார்க்கெட் - கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் உருவெடுத்துள்ளது. வியாபாரிகள் ஒருபுறம் காந்தி மார்க்கெட்டில் திறக்க வேண்டும் என்றும் மறுபுறம் சில வியாபாரிகள் கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும் என இருபுறமாக விவாதம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் மாவட்ட நிர்வாகம் மாட்டிக்கொண்டு செய்வதறியாது திகைத்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட்டில் 4வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு ஆரம்பமாகி 5 மாத காலங்களிலேயே இதுவரை 4முறை தீ விபத்து நடைபெறுகிறது. இதில் அடுத்தடுத்து 5 கடைகளில் தீ பரவியது கடைகள் பூட்டப்பட்டு இருந்ததால் பெருமளவு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மார்க்கெட்டை உடனடியாக திறக்க வேண்டுமென அங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வியாபாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

மறுபுறம் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது கூட்டமும் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் மறுபுறம் ஆட்சியருடன் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

Advertisement