திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சாமி திருக்கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா,சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்….. நான்காண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், இந்திய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கோவிலாக உள்ளது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீடு, எந்தவித அரசியல் தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாட்டிற்கு உபரி நீர் தான் வழங்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு…. காவேரி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டில் உள்ள முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களுக்கு முழுமையான விவரங்கள் தெரியும்.

பெங்களூரில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சரியான குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருவது அனைவரும் அறிந்த செய்தி தான். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கும் இது தெரியும். இது குறித்து இதற்கு மேல் நான் கருத்து கூற விரும்பவில்லை. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

காவிரி பிரச்சனை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் அந்த நாள் விரைவில் வரும் அன்று அந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என உறுதிபட தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 22 August, 2024
 22 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments