திருச்சியில் 2,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - விரட்டிப் பிடித்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள்!!
திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் அருகே ரேஷன் அரிசி 4 ரூபாய்க்கு பொதுமக்கள் விற்பதாகவும் அதனை 9 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி மில்லுக்கு கொடுப்பதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் நடத்திய சோதனையில் ஐயப்பன் என்பவரின் காரில் 2,200 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. உடனே குற்றவாளி அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். உடனே அதிகாரிகள் இவரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.
கடத்துலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணையில் கடத்தப்படும் ரேஷன் அரிசி கள் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல படுவதாகவும் பல மில்களுக்கு கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.