திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது இந்த நிலையில் நேற்றுடன் அக்னிநட்சத்திரம் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நேற்றும் இன்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பகல் நேரத்தில் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் பெரும் நிம்மதியோடு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் மழை பெய்யும் போது ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று (30.05.2022) பெய்த மழையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய வரிசையில் செல்லும் பாதையில் மேல் கூரைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து இல்லாமல் இருப்பதால் மழைநீர் பக்தர்கள் செல்லும் பாதையில் விழுகிறது.
இதனால் பக்தர்கள் நனைந்தபடி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி ரங்கநாதரை தரிசனம் செய்ய பல்வேறு வசதிகளை செய்து வரும் கோயில் நிர்வாகம் மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments