தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் விஜயா ஜெயராஜ்,

சேர்மன் துரைராஜ் கருணாநிதி டோல்கேட் சுப்பிரமணி துர்கா தேவி, தொமுச குணசேகர், கண்ணன், செவந்தி லிங்கம், மோகன்தாஸ், நாகராஜ், கிராப்பட்டி செல்வம், ராமதாஸ், புஷ்பராஜ், கலைச்செல்வி கவிதா, கருமண்டபம் சுரேஷ், கருத்து கதிரேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments