மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மேரா யுவ பாரத் கேந்திரா சார்பில் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை நடத்திவருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட மேரா யுவ பாரத் கேந்திரா சார்பில் ஒற்றுமைக்கான பேரணி இன்று நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் இருந்து தொடங்கி வெஸ்ட்ரி பள்ளி மைதானம் வரை சென்றடைந்த இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் பாரம்பரிய கலைகளுடன், கையில் தேசிய கொடியுடன் பங்கேற்றுச் சென்றனர்.
முன்னதாக இந்த பேரணியை திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ கொடியசைத்து தொடங்கிவைத்தார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments