தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ” தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சமூகம் ஆகிய இரு சாராரும் வாழ்த்தி வரவேற்றுப் பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : ஆட்சி இயந்திரம், அரசு அலுவலர்களால் செம்மையாக இயக்கப்படுவதால் தான், நாட்டு மக்கள், பண்பட்ட ஜனநாயக வழித்தடத்தில் அமைதியில் ஆக்கங்கள் உருவாக்க முடிகிறது.

ஆசிரியப் பெருமக்கள், தங்களின் தூய புனிதப் பணிகளால், மக்களின் இதயத்தில் மண்டும் உன் இருளைப் போக்குவதால் தான், பண்பட்ட பாதையில் சமுதாயம் பயணிக்கிறது. இவ்விரு சாரார் சற்றொப்ப 20 ஆண்டு காலமாகச் கோரி வந்த நியாமான கோரிக்கையை ஏற்று, தீர்க்கப்படாமல் தொடர்ந்த சிக்கலைத் தீர்க்கும் உன்னத நோக்கத்தில் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு

வெளிவந்திருக்கிறது. ” தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ” தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சமூகம் ஆகிய இரு சாராரும் வாழ்த்தி வரவேற்றுப் பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது.இது நாடும் எல்லோரும் வரவேற்றுப் பாராட்டும் உன்னதமான நற்காரியமாகும்.

நீண்ட நாளைய மனக்குமுறலுக்கு முடிவு கட்டி, அரசு அலுவலர்களும் ஆசிரியர்ப் பெருமக்களும் தமது வாழ்க்கைப் பயணத்தைப் புதிய உத்வேகத்துடனும் புதிய நோக்குடன் தொடர வழிகாட்டி யிருக்கிறது. தமிழகத்திற்கு நேற்றைய விட இன்று நல்லதாகவும், இன்றைய விட வருங்காலம் மிகவும் நல்லதாகவும் அமையும் என்பதற்கு இத்தகைய நற்காரியங்கள் நற்சாட்சிகளாகின்றன.

வாழ்க தமிழ்நாடு! வெல்க திராவிட மாடல் நல்லாட்சி, இன்று போல் என்றும் ! இவ்வாறு பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments