தியாக தலைவி அன்னை சோனியா காந்தி MP அவர்களின் பிறந்தநாள் விழா மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிரசிட்டோபேர் திலக் மற்றும் மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில், தியாகி அருணாச்சலம் மன்றத்தில், காங்கிரஸ் பேரியக்க கட்சி கொடியேற்றி, கேக்வெட்டி கொண்டாடப்பட்டது.
முன்னதாக மலைக்கோட்டை கோட்டம் சார்பாக வெங்கடேஷ் காந்தி தலைமையில் மாணிக்க விநாயகர் கோவிலில் அபிஷேக ஆராதனை வழங்கப்பட்டது. ஜங்ஷன் கோட்டம் சார்பாக பிரியங்கா பட்டேல் தலைமையில் ஐயப்பன் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தப்பட்டது. மார்க்கெட் கோட்டம் சார்பாக பகதூர்ஷா தலைமையில் நாதர்ஷா பள்ளிவாசல் தர்காவில் சிறப்பு பிராத்தனை நிகழ்த்தப்பட்டது.
அரியமங்கலம் கோட்டம் சார்பாக அழகர் தலைமையில் அம்பிகாபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
பாலக்கரை கோட்டம் சார்பில் எடத்தெரு ஸ்ரீ வன்னி விநாயகர் ஆலயம் எதிரில் மகாத்மா காந்தி வாசகசாலையில் ஏழை, எளிய மக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காட்டூர் கோட்டம் சார்பாக ராஜா டேனியல் ராய் தலைமையில் அந்தோனியார் கோவிலில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் காலைஉணவு வழங்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் மாற்றும் திருவானைக்கோவில் கோட்டம் சார்பில் ஜெயம் கோபி – தர்மேஷ் ஆகியோர் தலைமையில் ராகவேந்திரா கோவிலில் வெள்ளி தேர் இழுக்கப்பட்டது.
நிகழ்வில் கோட்ட தலைவர்கள் சுப்ரமணியப்புரம் எட்வின், உறையூர் பாக்யராஜ், தில்லைநகர் ராகவேந்திரன், புத்தூர் மலர் வெங்கடேஷ், ஏர்போர்ட் கனகராஜ், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, சிறும்பான்மை பிரிவு மொய்தின், கலை பிரிவு அருள், எஸ்சி பிரிவு கலியபெருமாள், ஊடக பிரிவு செந்தில், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், இந்திரா தோழி மாரீஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் ஜோன்ஸ், வார்டு நிர்வாகிகள் மும்தாஜ், பாண்டியன், கண்ணன், கோகிலா, சரவணன், ராமர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments