Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்ட ரோந்து காவலர்களுக்கு “Live Camera” வழங்கிய SP

இன்று (14.06.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வராக நாகரத்தினம் அவர்கள் புதிதாக வரப்பெற்ற 57 Body Worm Camera 44 இருசக்கர வாகனங்களுக்கும், 11 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கும்,கொள்ளிடம் மற்றும் திருவெரம்பூருக்கு வழங்கப்பட்ட நான்கு சக்கர ரோந்து வாகனங்களுக்கும்,

கொடுத்தும் அதில் மூன்று வாகன ஓட்டுனர்களுக்கு அணிவித்து  அறிவுரைகளை வழங்கி பின்னர் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் வாகன காவலர்கள் அவரவர் பணி துவக்கும் போது Body Worm Camera charge உள்ளதா என சரி பார்த்து பணியினை துவங்க வேண்டும்.எந்த ஒரு தகவல் பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்குச் செல்லும் போது

 Body Worm Camera on செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த பதிவுகள் அவரவருக்கு தற்கார்க்கும் விதமாக இருக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறி உள்ளார்தினம்தோறும் அவரவர் பணி முடியும் போது காவல் நிலையத்தில் அதன் பதிவுகளை காவல் நிலைய கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.இந்த Body Worm Camera  பாதுகாப்பாக கையாளவும் மற்றும் காவலர்கள் கண்ணியத்துடன் பேசவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த Body Worm Camera பதிவின் மூலம் பிரச்சனையின் போது காவல்துறை பொதுமக்களுடைய நடைபெறும் விவாதங்கள்  உண்மை நிலை காண ஏதுவாக இருக்கும். Body Worm Camera ஒவ்வொருவரது இருப்பிடத்தையும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க இயலும். இதன் மூலம் காவலர்கள் எந்தெந்த பகுதியில்

இருந்து பணியினை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சம்பவ இடத்திற்கு எந்த ரோந்து வாகனத்தை. உடனடியாக அனுப்பலாம் என்பதையும் இதன் மூலம் அறிய உதவியாக இருக்கும் மேலும் பொதுமக்கள் ஏதேனும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க நேரிட்டால் திருச்சி மாவட்ட காவல்

 கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்8939146100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *