திருச்சி மாநகர மாவட்ட மருத்துவ சமூக நல சங்கம் சார்பில் மருத்துவ சமூக மாணவர்களின் கல்வி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. இப்போட்டியில் மூன்றாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 4 – 5 ஒரு பிரிவாகவும் 6, 7, 8 வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 9, 10ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகும், 11, 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் (ரூ. 800/- மதிப்பள்ள) தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் தேசியக்கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை அனுசுயா, எழுத்தாளர் சீத்தா வெங்கடேசன்
அறிவியல் புத்தாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்.
ஆசிரியர் சந்திரசேகர் தவே, தலைமையுரை தலைவர் செல்வராஜ், வாழ்த்துரை செயலாளர் ப.தர்மலிங்கம், நன்றியுரை பொருளாளர் முருகேசன் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மதியழகன், ரெங்கராஜ், பாண்டியராஜ், ஸ்டாலின், ராம்மூர்த்தி, குஞ்சுவேல் மற்றும் இளைஞரணியினர் கலந்து கொண்டனர். 
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments