திருச்சிராப்பள்ளி மாவட்ட
ஆட்சியரகத்தில், தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு “சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினை” மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேற்று(25.10.2021)  தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசிய போது……2021-ஆம்ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் இக்கண்காட்சி மற்றும் விற்பனையானது (25.10.2021) தொடங்கி வருகின்ற 03.11.2021 வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறும்.

தமிழ்நாட்டில் ஐவுளித்துறையில் புகழ்பெற்ற கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பருத்தி சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள்,
கோரகாட்டன் சோகைள், பெட்ஷீட்கள் மற்றும் துண்டு இரகங்கள் எனசுமார் ரூ.50 இலட்சம் மதிப்பில் கண்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன, இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேற்படி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜவுளி இரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசினால் 30% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…

 
 
 26 Oct, 2025
26 Oct, 2025                           117
117                           
 
 
 
 
 
 
 
 

 27 October, 2021
 27 October, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments