திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், காமலாபுரம் கிராமத்தில் இன்று (29.03.2023) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 901 பயனாளிகளுக்கு 2 கோடியே 5 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், வழங்கி உரையாற்றினார்.
இந்நிகழ்வில், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், தொட்டியம் வருவாய் வட்டாச்சியர் ஞானாமிர்தம், காமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா சக்திவேல், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய துனணத் தலைவர் பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments