ஆதரவற்றோர்க்கான பிரத்தியேக சிகிச்சைப்பிரிவு- திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நெகழ்ச்சி நிகழ்வு 

ஆதரவற்றோர்க்கான பிரத்தியேக சிகிச்சைப்பிரிவு- திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நெகழ்ச்சி நிகழ்வு 

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிக்க ஆயிரம் கரங்கள் இருப்பினும் அவசர காலங்களில் உதவுவதற்கு சமூக ஆர்வலர்கள் முன்வரும் நிலையிலும் அவர்களை மருத்துவமனையில் பாதுகாத்துக்கொள்ள எப்போதும் சவாலாக  தான் இருக்கின்றது இதற்காகவே பிரத்தியேகமாக ஒரு தனி பிரிவே உருவாக்கியுள்ளது திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை  .  

மருத்துவமனை முதல்வர் வனிதா முன்னிலையில், இந்த புதிய சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகரக் காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் ஆகியோர் நேற்றைய தினம் திறந்துவைத்தனர்.
இது குறித்து, மருத்துவமனை முதல்வர் வனிதா கூறியதாவது,
"திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் ஆதரவற்றோர் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகின்றனர்.


இவ்வாறு சிகிச்சைக்கு வருவோருக்கு பிற நோயாளிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நேரிட்டதால், 20 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சிகிச்சை பெறும் ஆதரவற்றோருக்கு பிரத்யேக சிகிச்சை, கூடுதல் கண்காணிப்பு, கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.


மேலும், சிகிச்சை முடியும் ஆதவற்றவர்களை காவல் துறை உதவியுடன், சட்டப்படி உறவினர்களிடம் ஒப்படைக்கவும், உறவினர் அல்லாதவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க இந்த பிரத்யேக சிகிச்சைப் பிரிவு உதவியாக இருக்கும்.
சிகிச்சைக்குச் சேர்க்கப்படும் ஆதரவற்றோரில் அதிகம் பேர் முதியவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு நோய் மற்றும் எலும்பு பாதிப்புடன் உள்ளனர். எனவே, தற்போது இந்தச் சிகிச்சைப் பிரிவுக்கென தலா ஒரு பொது மருத்துவர், எலும்பு மருத்துவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஷிப்டுகளிலும் பணியாற்ற செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM