தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சாரப் பயணம் நாளை திருச்சியில் இருந்து துவங்க உள்ளது. இதையொட்டி கட்சியினரால் பல்வேறு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று காலை திருச்சி கண்ட்டோன்மென்ட் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, பறவைகள் சாலையிலுள்ள வழிவிடு முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டார். விஜயின் பிரச்சாரப் பயணம் வெற்றியடைய வேண்டி, அவர் முனீஸ்வரன் முன்னிலையில் சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டதோடு, விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் நடத்தப்பட்டது.
பிரார்த்தனையை முடித்த பின் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக மக்கள் எதிர்பார்ப்புக்கிணங்க விஜயின் அரசியல் பயணம் நாளை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் துவங்குகிறது. மக்கள் அரசியலுக்கு மாற்றம் தேடி நிற்கும் இந்த நேரத்தில், விஜய் தலைமையிலான வெற்றி கழகம் மக்களின் மனதை வெல்லும். நாளைய தொடக்க நிகழ்விற்கு திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருந்து மக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments