மேயர் மு. அன்பழகன் அவர்கள் மண்டலம் 5 ,வார்டு எண் 27 ஆட்டுமந்தை திறந்தவெளி உடற்பயிற்சி மையத்தில் வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் குடியிருப்பவர் நல சங்கம், அப்பகுதி மக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மேயர் அவர்களுடன் கலந்துரையாடி அடிப்படை வசதிகளை குறித்து கேட்டு அறிந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட 65 வார்டு பகுதியில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர் கூட்டணராக கொண்டு வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் , குடியிருப்போர் நல சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்புடன் வார்டு அளவிலான கோரிக்கைகள் செயல்படுத்தும் விதமாக சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை பயன்படுத்திட பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளான குடிநீர் வழங்கள், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழை நீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து அவற்றின் நிலவும் சேவை குறைபாடுகள் தொடர்பாகவும், திறந்தவெளி இடங்கள், சாலையோர பகுதிகள், குளக்கரைகள் ஆகியவையே சமூக ஆர்வலர்கள் தொழிற்சாலை இதர நிறுவனங்கள் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்தும் மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் மூலம் பராமரிப்பு செய்வது குறித்தும், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே மழை நீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், தூய்மை பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தல் குறித்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்
தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் குறித்தும், மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்தும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீர் நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீர் ஆதாரங்கள் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொது மக்களிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்டறிந்து சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments