Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி VDart நிறுவனம் மற்றும் VEPSA இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

திருச்சி VDart நிறுவனம் மற்றும் VEPSA ஒருங்கிணைப்பில் st.john’s vestry AI மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கிரிக்கெட் மற்றும்  கைப்பந்து போட்டிகள் கடந்த மார்ச் 15ம் தேதி  நடைபெற்றது. இப்போட்டியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களை ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை மற்றொரு பிரிவாகவும் அணி அமைத்து போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டியும், மாணவிகளுக்கு கைப்பந்து போட்டியும் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 4 அணியினரும், பெண்கள் பிரிவில் 4 அணியினரும் போட்டியிட்டனர். அதில் 9 மற்றும் 10 வகுப்புகளில் சீனியர் பிரிவு என்றும் 12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களை சூப்பர் சீனியர் என்று பிரித்திருந்தனர். சீனியர் பிரிவில் வெற்றி பெற்ற அணி சூப்பர் சீனியர்  வெற்றி பெற்ற அணியோடு மோதி இறுதிப் போட்டியில் பங்குபெற்று வெற்றி வாகை சூடினர் .

இதே விதிமுறைகளை கைபந்தாட்டத்திற்கும் பின்பற்றப்பட்டது. 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *