சாரநாதன் கல்லூரியில் விளையாட்டு விழா திருச்சிராப்பள்ளி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 27ம் ஆண்டு விளையாட்டு விழா 20.03.2025 அன்று மாலை 4.15 மணியளவில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் திரு. ச. ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர். தா. வளவன் அவர்கள் தலைமை தாங்க விழா நடைபெற்றது.விழாவில் எஸ். தனலெட்சுமி ஒலிம்பிக் வீராங்கனை மற்றும் விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றி, மாணக்கர்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக உரையாற்றி வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவிற்கு வருகைபுரிந்தவர்களை உடற்கல்வி இயக்குனர் திரு. ரகுபதி வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் செல்வி ஜெயப்ரியா நன்றியுரை வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments