முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் -திருச்சி மாநகராட்சியில் ரூ.12 லட்சம் அபராதம் வசூல்!!

முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் -திருச்சி மாநகராட்சியில் ரூ.12 லட்சம் அபராதம் வசூல்!!

திருச்சி மாநகராட்சி கொரோனா பரவலை தடுக்க கொரோனா பரிசோதனை மையம், காய்ச்சல் பரிசோதனை முகாம் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ள நபர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் 4ம்தேதி முதல் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்க துவங்கியது.

Advertisement

இதற்காக மாநகராட்சியின் 65வது வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சியின் 4 கூட்டங்களிலும் சாலையில் சோதனை நடத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதன்படி முகக்கவசம் அணிய அவர்களிடம் இருந்து கடந்த 12ம் தேதி வரை 10,31,777 ரூபாயும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களிடம் இருந்து 1,65, 507 ரூபாய் என மொத்தம் 11,97, 778 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

இந்நிலையில் சென்னையைப் போல முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 5ஆயிரம் ரூபாய் வீதம் நேற்று முதல் திருச்சி மாநகர போலீஸாரும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் ரசீதும் வழங்கப்படுகிறது.