மெட்ராஸ் – ஐ’ தொற்று அண்மைக்காலமாக கணிசமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நோய் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில்பரவக்கூடியதாகும் தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் கடந்த சில தினங்களாக திருச்சியிலும் கணிசமாக இத்தொற்றுநோய் பரவி வருகிறது. கால நிலை மாற்றத்தின் காரணமாக ‘மெட்ராஸ் – ஐ’ எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு தற்போது பரவி வருகிறது.

இதுகுறித்து வினோத் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் வினோத் பேசுகையில், கண்ணின் வெள்ளைப் பகுதியில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் – ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, மெட்ராஸ் – ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவும்.கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் – ஐ-யின் முக்கிய அறிகுறிகளாகும். பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் – ஐ’ பிரச்சனை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிகவாய்ப்புள்ளது. இதற்கு ஒரே தீர்வு பாதுகாப்புடன் இருப்பதுதான்.

மெட்ராஸ் – ஐ’ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த் தொற்றுதான். ஆனால், அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும். நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் ஓய்வெடுங்கள். அதிகமானால் உடனே மருத்துவரை அணுவது நல்லது. இந்த வைரல் தொற்று வேகமாக பரவும் என்பதால் பள்ளி, அலுவலகங்களில் கவனமாக இருப்பது இருப்பது அவசியம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments