திருச்சி காஜாபேட்டை, கிருஷ்ணர் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா 36 வருடத்திற்கு பிறகு இன்று நடைபெற்றது. கடந்த 9ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், மகா பூர்ணாஹுதி தீபாரதனையுடன் துவங்கியது.
இதனை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு காவேரியில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10ம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும், வேத பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக நாளான இன்று காலை 4.30மணி அளவில் நான்காம் கால பூஜை உடன் வேத விற்பனர்கள் யாக சாலையிலிருந்து யாத்திரதானம் கடத்துடன் புறப்பட்டன.
தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷமிட்டனர். வேத விற்பனர்கள்
பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். அதன் பின்னர் கோவிலில் விசேஷ பூஜைகளும், நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments