திருச்சி கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யா லயாசீனியர் செகண்டரிபள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவை விக்னேஷ் கல்விக் குழும அறங்காவலர் சகுந்தலா விருத்தாச்சலம் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கதிரியக்க நிபுணர் ஆலோசகர் டாக்டர் பிரியாநவீன், அறங்காவலர் லட்சுமிபிரபா கோபி நாதன்,

இயக்குனர் வரதராஜன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் தயானந்தன், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள், மழலைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முடிவில் ஸ்ரீநிகேஷ் நன்றி கூறினார்.




            
            
            
            
            
            
            
            
            
            


Comments