திருச்சி மாவட்டம் சீராதோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மூலவரான ஸ்ரீலலிதாம்பிகைக்கு வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மூலவர் முன்பு சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் கொண்டு நெய்குளம் அமைக்கப்பட்டது. நெய்குளத்தில் காட்சி அளித்த ஸ்ரீலலிதாம்பிகைக்கு வேத மந்திரங்கள் முழங்க ஷோடச தீபாராதனை நடைபெற்றது. மேலும் ஆலய வளாகத்தில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்குளத்தில் காட்சி அளித்த ஸ்ரீ லலிதாம்பிகையை பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments