Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5-ஆம் நாள்: “அரைச் சிவந்த ஆடையுடன்” கிளி ஏந்தி எழிலாகக் காட்சியளித்த நம்பெருமாள்!

நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 5 ஆம் நாளில் – திருமாலை பிரபந்தம் செவிமடுக்க
சௌரிக் கொண்டை சாற்றி ;
அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ;

வைர‌அபய ஹஸ்தம் சாற்றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட ;

திருமார்பில் – ஸ்ரீ ரங்க விமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம் ; அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்: அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 8 வட முத்து மாலை;

“அரைச் சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து

பின் சேவையாக – சிகப்புக் கல் பதக்கம்; காசு மாலை ; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாத்திக்கிறார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *