திருச்சி: உலகப் புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (11.11.2025) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இந்தக் காணிக்கை எண்ணும் பணியின் முடிவில், கோயிலுக்குக் கிட்டத்தட்ட ரூ. 78 லட்சம் ரொக்கம் வருவாயாகக் கிடைத்துள்ளது.

ரொக்கம்: ரூபாய் 78,02,585 ,தங்கம்: 58 கிராம், வெள்ளி: 994 கிராம்,வெளிநாட்டு கரன்சிகள்: 301 தாள்கள்,கோயில் இணை ஆணையர் திரு. சிவராம்குமார் முன்னிலையில், உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. பெரம்பலூர் உதவி ஆணையர் திருமதி சி. உமா அவர்கள் மேற்பார்வையில், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், பரந்தாம கண்ணன்,

கோபாலகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பாஸ்கர், உதயகுமார், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் பக்தர்களின் காணிக்கைகளைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments