திருச்சியில் கடந்த ஒரு வாரமாக அனல் காற்றுடன் கூடிய கடும் வெயில் நிலவி வருகிறது அனல் காற்றுக்கு மத்தியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
வேட்பாளர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்ய கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பிரான்சிஸ் மேரி ஸ்ரீரங்கத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சமுத்திரம், பாகனூர், மரவனூர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஐஜேகே வேட்பாளர் பிரான்சிஸ் மேரி கடைகளுக்கு சென்று கொளுத்தும் வெயிலுக்கு இதமாக அவரே கரும்பு ஜூஸ், சர்பத் போட்டுக் கொடுத்தும், டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேலும் தான் வெற்றிபெற்றால் தொகுதிக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

Advertisement







Comments