திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி அவரது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அதை நிறைவேற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று சிறுகமணி பேரூராட்சி S.புதுக்கோட்டை அங்கன்வாடியில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த பணியாளர்களிடம் கோரிக்கைகள் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது சமையல் பாத்திரங்கள் இல்லை என பணியாளர்கள் கூறியதைத் தொடர்ந்து, தனது சொந்த நிதியில் ரூபாய் 10,000 வழங்கி உடனடியாக குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிகொள்ள ஆலோசனை வழங்கினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments