திருச்சியில் பிரபல ரவுடியான திலீப்பின் ஆதரவாளரான ரவுடி அன்பு மீது ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது. பைனான்ஸ் மற்றும் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு கபடி மற்றும் சேவல் சண்டை விடப்பட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது அது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதம் காரணமாக அன்பு வை இவர்கள் கொலை செய்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் மூலத்தோப்பைச் சேர்ந்த தினேஷ் பாபு (28), சென்னை ராயபுரம் காசிமேடு லோகேஷ் (23), ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தைச் சேர்ந்த மகாபிரபு (23), ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரைச் சேர்ந்த அய்யனார் (22), திருவானைக்காவலைச் சேர்ந்த ரகுபதி (22), ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் திலீபுடைய ஆதரவாளர்களா இருந்துள்ளார்களா? திலீப்பிற்கும் அன்பிற்கும் ஏதேனும் முன்பகை இருந்துள்ளதா? அதன் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மூன்று அருவாள், இரண்டு பல்சர் வண்டி, ஒரு டிவிஎஸ் மேக்ஸ் வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் லோகேஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் சரித்திர பதிவில் குற்றவாளியாக இருந்துள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments