108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதிப்பார். தைதேர் உற்சவத்தின் 4ம் திருநாளில் நம்பெருமாள் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக மாம்பழச்சாலை அருகில் உள்ள வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக வீதிஉலாவந்து பின்னர் வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்.
தங்க கருடவாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்துச் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ம்திருநாளான வருகிற ஜனவரி 10ம்தேதி நடைபெற உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments