108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த (01.05.2021)ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினசரி பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உற்சவர் எழுந்தருளி வீதி உலாவந்து நடைபெறும்.

இவ்விழாவின் 4ஆம் நாளான இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்குள்ளேயே காட்சியளித்தார்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே கோவில் அதிகாரிகள் மற்றும் பட்டர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF







Comments