திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணைய வழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் கடந்த சனிக்கிழமை அன்று (5.6.2021) தொடங்கப்பட்டது.
அன்றைய தினம் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார் ,
முதல் வகுப்பில் தமிழ்நாடு, வெளி மாநிலம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர். இதே போன்று வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆன்மீக வகுப்பில் தங்களது குழந்தை பங்கு பெற விரும்புவர்கள்
குழந்தையின் பெயர் :
வயது :
பெற்றோர்கள் பெயர் :
முகவரி :
மின்னஞ்சல் (e-mail) :
கைபேசி எண் (whatsapp number) :
ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு
avsrirangamtemple@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை 12.06.2021 ஆன்மீக வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் Video call link : https://meet.google.com/hqw-nvdg-sog
இந்த லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments