108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத் துடன் தொடங்கி பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பகல் பத்து உற்சவம் நிறைவுற்ற நிலையில், டிசம்பர் 30ஆம் தேதியான அன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
இராப் பத்து உற்சவத்தில் 5ம் நாளான இன்று மதியம் 1.30மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
இராபத்து 5ஆம் திருநாளான இன்று பிற்பகல், நம்பெருமாள் முத்துகிரீடம் அணிந்து, சிகப்புகல் ரத்தின அபயஹஸ்தம், மார்பில் சூரியபதக்கம், முத்துமாலை, பவளமாலை அடுக்கு திருவாரணங்களை சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ராப்பத்து 5ம் நிள் உற்சவத்தில் சொர்க்கவாசல் திறப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளுடன் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசலை கடந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று இரவு 8:00 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் படுவார்கள். அதேபோல இன்று இரவு 10:00 மணிக்கு மீண்டும் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments