திருச்சி ஸ்ரீரங்கத்தில் 42.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரே சமயத்தில் ஆயிரம் பேருக்கு மேல் தங்கும் வகையில் “யாத்ரி நிவாஸ்’ தங்கும் விடுதி கடந்த 2014 -ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் கொரானோ தொற்று பரவல் 2வது அலை காரணமாக கடந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்க தற்காலிகமாக அனுமதிக்கவில்லை. வைரஸ் தொற்று காலத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தும் முகாமாக செயல்பட்டது.
இதனை தொடர்ந்து கொரோனா தெற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்பு இன்று 24.07.2021 முதல் ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி யாத்திரி நிவாஸ் செய்யட உள்ளது. முன்னதாக கடந்த 10 தேதி முதல் விடுதி அறை, வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணி நடைபெற்று வந்தது.
இதை முன்னிட்டு இன்று ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவுறுத்தலின்படி, ஸ்ரீரங்கம் பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்திரி நிவாஸில் சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கோயில் அறங்காவலர்கள், விடுதி கண்காணிப்பு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
4 மாதங்களுக்கு பிறகு பூஜைகள் நடத்திய பின்னர் தங்கும் விடுதி இன்று முதல் செயல்பட துவங்கியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இன்று முதல் கோயில் இணையதள முகவரியான www.srirangam.org -ல் ஆன்லைன் மூலமும், நேரிலும் வந்து தங்கும் விடுதியில் தங்க பதிவு செய்து கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW




            
            
            
            
            
            
            
            
            
            


Comments