திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரி சார்பில் உலக புறவுலக (WORLD AUTISM DAY) சிந்தனையற்றோருக்கான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது.பேருந்து நிலையத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வரை ஆட்டிசத்தை அகற்ற விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி பேரணியாக சென்றனர்.36 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளதாகவும் உலகில் 67 மில்லியன் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளதாக எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும் பேரணியில் கலந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி ஆட்டிசம் குறைபாடு இல்லா உலகை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.முன்னதாக இப்பேரணியை ஹலோ எஃப்எம் திருச்சி நிலைய தலைமை டைரி சாகா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி கல்லூரி துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், செயலாக்க இயக்குனர் சம்பந்தம், உதவி இயக்குனர் சிவக்குமார், முதல்வர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments