முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்றது, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் பங்கேற்று முகாம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்

திருச்சி மாவட்டம்,
முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் பங்கேற்று

முகாமிற்கு வரும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை எவ்வாறு பெற வேண்டும் மற்றும் மனுக்கள் எந்த அரசு துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பதை அறிந்து அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த மனுக்களை அனுப்பி வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றிட எவ்வாறு நாம் செயல்பட வேண்டும் என்பதை பற்றி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார், கூட்டத்தில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், மற்றும் முகாம் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://www.threads.net/@trichy_vision
முசிறியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆலோசனைக் கூட்டம்



Comments