திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி ஊராட்யில் 2 ஆம் நாளாக நடைபெற்று வருகின்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று 5 முதல் 9 வார்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குவளக்குடி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.
முகாமிற்கு திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி,திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தகுமார், அண்ணாதுரை ஒன்றிய கழகச் செயலாளர்
கே எஸ் எம் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து
வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நத்தம் பட்டா ஆறு பேருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் குவளக்குடியைச் சேர்ந்த லீலா மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு அதற்கான அடையாள அட்டையும் வழங்கினார்
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இது முகாமில் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments