திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்யில் 2 நாள் நடைப்பெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்குறிச்சியிள் 19ஆம் தேதி அணையில் 5, 6, 7, 8, 9, 10 ஆகிய வார்டுகளிலும் நாளை 1, 2, 3, 4, 11, 12 வார்டுகளுக்கு திருநகரில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
திருச்சி ஆர்டிஓ ராஜலட்சுமி தலைமை வைத்தார். தாசில்தார் தனலட்சுமி, சமூகத் திட்ட தனி தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நத்தம் பட்டா விஜயம் மாலதி முருகேசன் மார்ட்டின் ஜெயக்குமார் ஆகிய நான்கு பேருக்கு வழங்கினார்.
அதேபோல் குடும்ப அட்டையில் பெயர் திருத்த முகவரி மாற்றம் என கீழ குறிச்சி சேர்ந்து விஜயலட்சுமி திருநகர் இளங்கோவன் ஆகியோருக்கு வழங்கினார்
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு பெட்டகம் வழங்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இது முகாமில் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision
திருவெறும்பூரில் இரண்டு நாட்கள் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

Comments