திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணும் வகையில் முகாம்கள் நடைபெறுகிறது .
இம்முகாம்களில் வாயிலாக நகர்ப்புறத்திற்கு 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கும் வகையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் 19.09.2025ம் தேதி மண்டலம் 1, வார்டு எண் 12 மற்றும் 15-க்கு சிந்தாமணி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியிலும்
மண்டலம் 5 வார்டு எண்.10 மற்றும் 11க்குஉறையூர் நெசவாளர் திருமண மண்டபத்திலும்,
23.09.2025ம் தேதி மண்டலம் எண் 2, வார்டு எண் 34க்குதுரைசாமிபுரம் மெயின் ரோடு செல்லக்கண்ணு திருமண மண்டபத்திலும்,
24.09.2025ம் தேதி மண்டலம் 5, வார்டு எண் 26-க்கு தோர் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்திலும்
மரக்கடை குடிநீர் மேல்நிலை நீர்தேகக்க தொட்டி வளாகத்திலும் நடைபெறும்.
அறிவிக்கப்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது. மற்ற வார்டுகளுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும், மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments