திருச்சி ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வியியல் துறை சார்பில் முதலாவது, மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர் கபாடிபோட்டி ஜமால் முகம்மது கல்லூரி உள்மைதானத்தில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கோவை, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றது.
லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி பல்கலைக்கழக அணி, புதுக்கோட்டை ராஜாஸ் கல்லூரியை 38 – 30 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது, மற்றொரு போட்டியில் திருச்சி ஆண்டவர் கல்லூரி – பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை 35 – 27 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments