திருச்சி மாவட்டம் இருங்களூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.


ஆறு முதல் 50 வயதுடைய வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு கராத்தே சங்க திருச்சி மாவட்ட தலைவர் ரென்ஷி துரைராஜ், ரென்ஷி அகிலன் மற்றும் பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களை வெகுவாக பாராட்டினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments