மாநில அளவிலான ஆன்லைன் சிலம்பப் போட்டி - திருச்சியை சேர்ந்த 19 பேர் தங்கப்பதக்கம்!!

மாநில அளவிலான ஆன்லைன் சிலம்பப் போட்டி - திருச்சியை சேர்ந்த 19 பேர் தங்கப்பதக்கம்!!

ஆன்லைன் முலம் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற "சாமி தற்காப்பு கலைக்கூடம் " வீரர்களுக்கு பொன்மலை ரயில்வே மைதானத்தில் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

Advertisement

ஆன்லைன் முலம் மாநில அளவிலான கோவிட் - 19 விழிப்புணர்வு சிலம்பம் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் செங்கல்பட்டு, மதுரை, நாமக்கல், மயிலாடுத்துறை, சிவகங்கை, மற்றும் திருச்சி மாவட்டங்களில் சார்பில் சுமார் 300 மேற்பட்ட சிலம்பம் வீரர்கள் போட்டியில் கலந்துக் கொண்டார்கள்.

இதில் திருச்சி பொன்மலையில் உள்ள "சாமி தற்காப்பு கலைக்கூடம்" சார்ந்த சிலம்பம் வீரர்கள் 19 தங்கப்பதக்கங்களை பெற்றார்கள்.

Advertisement

அவருக்கு பொன்மலை ரயில்வே மைதானத்தில் சிலம்பம் ஆசிரியர் டி.ஜீவானந்தம் தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் முன்னிலையில் நடந்தது. தொழிலதிபர் கல்லனை குணா வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டை தெரிவித்தார். விழாவில் எம்.நரேஷ் கணேஷ், என்.தயானந்த், பி.ரஞ்சித், டி.தர்ஷ்னி, என்.வெங்கடேஷ், டி.சிவகாமி, சாதனாஸ்ரீ , கவிதா சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

This image has an empty alt attribute; its file name is IMG-20201004-WA0024-300x225.jpg