திருச்சி மாவட்ட வலுதூக்கும் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்துடன் இணைந்து இன்றையதினம் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளை உறையூர் தனியார் அரங்கில் இன்று நடத்தியது.
பல்வேறு மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே 53, 59, 66, 74, 83, 93, 105, 125 மற்றும் 125க்கும் மேற்பட்ட எடை பிரிவுகளில், பெஞ்ச் பிரஸ் மற்றும் கிளாசிக் டெட் லிப்ட் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள், சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் ஹரித்துவாரில் ஜனவரி 18ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments